மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி சங்கத்தை வாரணாசியில் பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 06 JUL 2022 10:37AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வாரணாசியில் மூன்று நாள் அகில இந்திய கல்வி சங்கத்தைத் தொடங்கி வைக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்குகளில் 300 க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள்,  அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள்,  கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் ஒன்றாக கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முன்முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு, தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ நாடு முழுவதும் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது பற்றி இதில் ஆலோசிக்கப்படும். உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரபிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னணி இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசியக் கல்விக் கொள்கை, 2020-ஐ செயல்படுத்துவது குறித்த உத்திகள், வெற்றிகரமான செயல்பாடுகள் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகள் குறித்து  விவாதித்து பகிர்ந்து கொள்வதற்கான தளமாக இந்த உச்சிமாநாடு அமையும். பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம், கல்வி கடன் வங்கி, பல்முனை நுழைவு மற்றும் வெளியேறுதல், உயர்கல்வியில் பல்முனை கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற கொள்கை முன்முயற்சிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் மற்றும் திறந்த தொலைதூரக் கற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விதிமுறைகள், உலகளாவிய தரநிலைகளுக்கு ஒத்திசைவாக தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பைத் திருத்துதல், பல மொழித் திறனை மேம்படுத்துதல், இந்திய அறிவு ஞானத்தை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைத்தல், திறன் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் , வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவித்தல் போன்றவை  பல கொள்கை முயற்சிகளில் சில அம்சங்களாகும். பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே சீர்திருத்தப் பாதைக்கு வந்துள்ளன. ஆனால், இன்னும் பல நிறுவனங்கள்  மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் உள்ள உயர்கல்வி சுற்றுச்சூழல் அமைப்பு மையம், மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை விரிவுபடுத்துவதால், கொள்கை அமலாக்கத்தை மேலும் கொண்டு செல்ல விரிவான ஆலோசனைகள் தேவையாகும். இதற்கான கலந்தாய்வு மண்டல அளவிலும், தேசிய அளவிலும் நடந்து வருகிறது. கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தலைமைச் செயலாளர்களின் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார், அங்கு மாநிலங்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டன. வாரணாசி கல்வி சங்கத்தில்  இது தொடர்பான அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது.

ஜூலை 7 முதல் 9 வரையிலான மூன்று நாட்களில் பல அமர்வுகளில் பலதரப்பட்ட மற்றும் முழுமையான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, இந்திய அறிவு அமைப்புகள், கல்வியின் சர்வதேச மயமாக்கல், டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் ஆன்லைன் கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் புத்தாக்கம், தொழில்முனைவு, தரம், தரவரிசை, அங்கீகாரம், சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி, தரமான கல்விக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

உச்சிமாநாடு சிந்தனையைத் தூண்டும் விவாதங்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது செயல் திட்டம்  மற்றும் செயல்படுத்தல் உத்திகளை வெளிப்படுத்துகிறது, அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பது மற்றும் பல துறைசார்ந்த விவாதங்கள் மூலம் கட்டமைப்புகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு  தீர்வுகளை அளிப்பது ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

உயர்கல்விக்கான வாரணாசி பிரகடனத்தை ஏற்றுக்கொள்வது  அகில இந்திய கல்வி சங்கத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். இது இந்தியாவின் விரிவாக்கப்பட்ட பார்வை மற்றும் உயர்கல்வி முறையின் இலக்குகளை அடைய உதவுவதுடன், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்.

***************


(Release ID: 1839582) Visitor Counter : 217