வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசை 2021, 04 ஜுலை அன்று வெளியிடப்படுகிறது

Posted On: 01 JUL 2022 12:49PM by PIB Chennai

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் 3-வது தரவரிசைப் பட்டியலை, மத்திய வர்த்தக-தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல்,  4 ஜுலை, 2022 அன்று புது தில்லியில் நடைபெறும் பாராட்டு விழாவில் வெளியிடுகிறார்.

தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, மாநிலங்களுக்கான 3வது தரவரிசை பட்டியலை வெளியிடவுள்ளது. போட்டித்தன்மை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி என்ற தொலைநோக்குத் திட்டத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.  ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சியை  ஊக்குவிக்கும் நோக்கில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்களது கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்,  இந்த ஆய்வு 2018-ம் தொடங்கப்பட்டது.  

24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள், 3-வது ஸ்டார்ட்-அப் தரவரிசை ஆய்வில், 7 சீர்திருத்தங்கள் மற்றும் 26 நடவடிக்கை புள்ளிகளின் அடிப்படையில் பங்கேற்றன. ஸ்டார்ட்-அப்  சூழல் பற்றிய கருத்துக்கணிப்பு 13 மொழிகளில் 7200 பயனாளிகளிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்குள்  ஸ்டார்ட்-அப் கொள்கைகளை உருவாக்கிய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 30 ஆக அதிகரித்ததுடன், இவற்றில் 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஸ்டார்ட்-அப்புக்கென தனி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838471

***************


(Release ID: 1838543) Visitor Counter : 246