பிரதமர் அலுவலகம்
மணிப்பூரில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை பிரதமர் ஆய்வு செய்தார்
மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளையும் உறுதி செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUN 2022 3:53PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பிரேன் சிங்குடன் பேசியதோடு, மாநிலத்தின் சோகமான நிலச்சரிவால் ஏற்பட்ட நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பிரேன் சிங்குடன் பேசினேன். சோகமான நிலச்சரிவால் ஏற்பட்ட நிலைமை குறித்து ஆய்வு செய்தேன். மத்திய அரசிடமிருந்து சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளித்தேன். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1838310)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam