வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாளை வெளியிடுகிறார்

Posted On: 29 JUN 2022 2:58PM by PIB Chennai

தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில், 30 ஜூன், 2022 வியாழக்கிழமை  வெளியிடுகிறார்.

     தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020, தகவல் பெறுதல், ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர், சுற்றுச்சூழல், துறை சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் வழக்கமான தொழிலுக்கான வாழ்க்கை சுழற்சி சார்ந்த பிற சீர்திருத்தங்கள் போன்ற 15 தொழில் ஒழுங்குமுறை பிரிவுகளைக் கொண்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

     துறை சார்ந்த சீர்திருத்தங்கள் முதன் முறையாக தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதில் வணிக உரிமம், சுகாதார சேவை, சட்டப்பூர்வ எடை அளவியல், திரையரங்குகள், விருந்தோம்பல், தீயணைப்பு தடையில்லா சான்றிதழ், தொலைத் தொடர்பு, திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய ஒன்பது துறைகளில் 72 சீர்திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தது.  

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837882

***************(Release ID: 1837907) Visitor Counter : 220