தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் வேண்டுகோளுக்கு இணங்க அம்ப் ஆண்டவுரா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்ட ரயில்வே உத்தரவு

Posted On: 28 JUN 2022 11:37AM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு. அனுராக் தாக்கூரின் வேண்டுகோளுக்கு இணங்க அம்ப் ஆண்டவுரா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்ட ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமேம்பாலம் ரயில் நிலையத்தை ஜமா மசூதியுடன் இணைக்கும்;  ரயில் நிலையத்திலிருந்து மசூதிக்கு செல்வதை எளிதாக்கும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 1, 2022 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தின் பலனாக இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது.

***************


(Release ID: 1837508) Visitor Counter : 169