கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற கூட்டுறவு கடன் துறையின் எதிர்கால பங்களிப்பு குறித்த ஷெடியூல்டு மற்றும் பல்வேறு மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார்

प्रविष्टि तिथि: 22 JUN 2022 12:08PM by PIB Chennai

புதுதில்லியில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற கூட்டுறவு கடன் துறையின் எதிர்கால பங்களிப்பு குறித்த  ஷெடியூல்டு மற்றும் பல்வேறு மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கூட்டுறவு மூலம் செழுமை என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இம்மாநாடு வலுசேர்க்கும்.

இந்த மாநாட்டில் ஷெடியூல்டு மற்றும்  பல்வேறு மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் அமைப்புகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் போன்ற கூட்டுறவு கடன் துறையின் எதிர்கால பங்கு, இந்திய ரிசர்வ் வங்கி நிபுணர்களின் பரிந்துரைகள், தேசிய கூட்டுறவு நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின்  100 ஆண்டு சேவையும் மாநாட்டில் பாராட்டப்பட உள்ளது. நாட்டில் மொத்தம் 197 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன.  பல்வேறு வங்கிகளின் சேவை இம்மாநாட்டில் பாராட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836163

***************


(रिलीज़ आईडी: 1836186) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati