பாதுகாப்பு அமைச்சகம்
12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 75 எல்லைப் பகுதிகளில் ‘ப்ரோ கஃபே’ எனும் சாலையோர வசதிகளை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
22 JUN 2022 11:57AM by PIB Chennai
எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பின் (ப்ரோ) மூலம் 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 75 எல்லைப் பகுதிகளில் சாலையோர வசதிகளை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது தவிர, எல்லைப்பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதும், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகளை வழங்குவதும் இவற்றின் நோக்கமாகும். சாலையோர வசதிகளுக்கான இவை ப்ரோ கஃபே என பெயரிடப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் ராணுவ தேவைகளை எதிர்கொள்வதற்கு அப்பால் தொலைதூர எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால், இயற்கை அழகு நிறைந்த பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடினமான பருவநிலை மற்றும் புவியியல் சூழல்களில் அமைந்துள்ள சாலைகளில் சென்றுவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுமூகமான, வசதியான அமைப்பின் தேவையை அறிந்து சாலையோர வசதிகள் செய்யப்படுகின்றன.
எல்லைப்பகுதி சாலை அமைப்பின் விதிமுறைகள்படி, முகமைகள் அல்லது உரிமம் அடிப்படையில் வடிவமைத்தல், கட்டுமானம், இயக்குதல் என்பது அரசு மற்றும் பொதுத் துறை பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சாலையோர வசதிகள் என்பது இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துதல், உணவு விடுதி, தங்கும் இடம், ஆடவர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தனியான கழிப்பறைகள், முதலுதவி போன்றவையாகும்.
***************
(Release ID: 1836156)
(रिलीज़ आईडी: 1836175)
आगंतुक पटल : 253