உள்துறை அமைச்சகம்

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு

Posted On: 17 JUN 2022 1:17PM by PIB Chennai

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதில், இரண்டு ஆண்டுகள் தளர்வு அளித்து, 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தனது ட்விட்டர் செய்தியில், “கொவிட் பெருந்தொற்று அச்சம் காரணமாக, கடந்த 2 வருடங்களாக ராணுவத்தில் ஆட்சேர்க்கும் பணிகள் நடத்தப்படவில்லை. இதனால் ராணுவப் பணியில் சேர இயலாமல்போன இளைஞர்களுக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி, அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ஏராளமான இளைஞர்கள் பயன் பெறுவதுடன், நாட்டுக்கும் சேவையாற்ற முடியும் என்றும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு செல்வார்கள். இதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

                                   ***************

Release ID: 1834751



(Release ID: 1834791) Visitor Counter : 163