பிரதமர் அலுவலகம்
மும்பை ஆளுநர் மாளிகையில் ஜல்பூஷன் கட்டடம் மற்றும் புரட்சியாளர்களின் காட்சியக தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
14 JUN 2022 8:14PM by PIB Chennai
மகாராஷ்ட்ரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி அவர்களே, முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே அவர்களே, துணை முதலமைச்சர் அஜீத் பவார் அவர்களே, எதிர்க்கட்சி தலைவர் திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, முக்கிய விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே அனைவருக்கும் வணக்கம்.
இந்த பெரும் நிகழ்ச்சியில் நாம் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
மகாராஷ்ட்ரா பல துறைகளில் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஜகத்குரு ஸ்ரீ துக்காராம் மகராஜ் தொடங்கி பாபா சாஹேப் அம்பேத்கர் வரை சமூக சீர்திருத்தவாதிகளின் மிகச் சிறந்த பாரம்பரியத்தை இது கொண்டுள்ளது. மகாராஷ்ட்ராவிலிருந்து துறவி தியானேஷ்வர் மகராஜ், துறவி ராம்தேவ், துறவி ராம்தாஸ், துறவி சொக்கமேளா ஆகியோர் நாட்டிற்கு சக்தியை வழங்கியுள்ளனர். சுயராஜ்யம் பற்றி நாம் பேசும்போது, சத்ரபதி சிவாஜி மகராஜ், சத்ரபதி சம்பாஜி மகராஜ் ஆகியோரின் வாழ்க்கை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் தேசபக்த உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையின் கட்டுமானத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களின் நினைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதையடுத்து, ஆளுநர் மாளிகை மக்கள் மாளிகையாக மாறியிருக்கிறது.
அறிந்தோ அறியாமலோ இந்தியாவின் சுதந்திரம் பிடித்த ஒருசில சம்பவங்களோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திரம் எண்ணற்ற மக்களின் தவத்தாலும் உள்ளூர் நிலையிலும், தேசிய நிலையிலும், பல்வேறு சம்பவங்களின் கூட்டான தாக்கத்தாலும் வந்ததாகும். சமூக, குடும்ப அல்லது சித்தாந்தங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட இயக்கங்களின் ஒரே நோக்கம் இந்தியாவின் முழுமையான சுதந்திரம் என்பதாக இருந்தது. பாலகங்காதர் திலகர், சப்பேக்கார் சகோதரர்கள், வாசுதேவ் பல்வந்த் பாட்கே, மேடம் பிகாஜி காமா போன்றவர்களின் பன்முகப் பங்களிப்பு போற்றத்தக்கது. கதார் கட்சி, நேதாஜி தலைமையிலான ஆசாத் ஹிந்த் ராணுவம், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவின் இந்தியா இல்லம் ஆகியவை உலகளாவிய சுதந்திரப் போராட்டத்திற்கு அளவீடாக இருந்தன. உள்ளூரிலிருந்து உலகம் வரையிலான இந்த உணர்வுதான் நமது தற்சார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையாக உள்ளது.
நண்பர்களே,
இன்றைய நிகழ்ச்சி பலவழிகளில் முக்கியமானதாகும். நாட்டில் இளைய தலைமுறையினருக்கு இந்தப் பகுதியை உந்துசக்தி மையமாக மாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்து எனது உரையை முடித்து கொள்கிறேன்.
***************
(Release ID: 1834021)
(Release ID: 1834769)
Visitor Counter : 115
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam