நிதி அமைச்சகம்

புதுதில்லியில் இந்தியா- ஜப்பான் நிதி பேச்சுவார்த்தை

Posted On: 16 JUN 2022 4:56PM by PIB Chennai

இந்தியா- ஜப்பான் இடையிலான முதலாவது நிதி பேச்சுவார்த்தை, புதுதில்லியில் இன்று (16.06.2022), ஜப்பான் நாட்டின் சர்வதேச நிதி விவகாரங்கள்துறை துணைஅமைச்சர் திரு மசாடோ கந்தா மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அஜய் சேத்  இடையே நடைபெற்றது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா ஜப்பான் நட்புறவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்தியா- ஜப்பான் நிதித்துறை ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தை, தற்போது, துணை அமைச்சர்/ செயலாளர் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பங்குபரிவர்த்தனை வாரியம்  மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள்  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இருநாடுகளும் அடுத்த ஆண்டு ஜி 20 மற்றும் ஜி 7 அமைப்புகளின் தலைமை பொறுப்பை வகிக்கும்போது, தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றுவதை உறுதி செய்ததுடன், பேரியல்  பொருளாதார நிலவரம், நிதி அமைப்புகள், நிதி டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இரு நாடுகளின் முதலீட்டு சூழல் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நிதி ஒத்துழைப்பை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், இரு தரப்பு நட்புறவுகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடரவும், அடுத்து சுற்றுப்பேச்சுவார்த்தையை டோக்கியோவில் நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புகொண்டுள்ளன.

***************(Release ID: 1834615) Visitor Counter : 170