தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

“அக்னி வீரர்களை சேவைக்குப் பின் பயன்படுத்துவது – தொலை தொடர்புத்துறையின் முன்முயற்சி”

Posted On: 15 JUN 2022 4:49PM by PIB Chennai

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அக்னிபத்  திட்டத்தின் கீழ், ஆயுதப்படைகளில் பணி புரியும் அக்னி வீரர்களின் நான்காண்டு  சேவைக்குப் பின் அவர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து தொலை தகவல் தொடர்புத்துறை, தொலை தகவல் தொடர்பு சேவை வழங்குவோருடனான கூட்டத்தை இன்று  நடத்தியது. அக்னி வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, பெற்ற தொழில்திறன்கள் ஆகியவற்றை தொலைதகவல் தொடர்புத்துறையில் குறிப்பாக தொலை தகவல் தொடர்பு சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் அனைத்து நான்கு நிறுவனங்களின் (ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்- ஐடியா) பிரதிநிதிகளும் தொலை தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சஞ்சார் பவனில் நடைபெற்ற  கூட்டத்திற்கு தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

அக்னி வீரர்களுக்கான வேலைவாய்ப்புக்கு சில பகுதிகள் விவாதத்தின் போது கண்டறியப்பட்டன. கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்றவை இதில் அடங்கும்.   இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற பயிற்சி பெற்ற, திறன் மிக்க கட்டுப்பாடான இளைஞர்கள், தொலை தகவல் தொடர்புத்துறை உட்பட நாட்டிற்கு சொத்தாக இருப்பார்கள் என்பதை தொலை தகவல்  தொடர்பு சேவை வழங்குவோர் ஒப்புக்கொண்டனர்.



(Release ID: 1834361) Visitor Counter : 151