மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சேவையின் போது அக்னிவீரர்கள் பெற்ற பயிற்சியை பட்டப்படிப்புக்கான மதிப்பீடாக அங்கீகரிக்க உள்ளது மத்திய கல்வி அமைச்சகம்
Posted On:
15 JUN 2022 2:34PM by PIB Chennai
ஆயுதப் படைகளில் இந்திய இளைஞர்கள் சேவை செய்வதற்கான ஈர்ப்புமிக்க அக்னிபத் எனும் ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஜூன் 14 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படுவோர் அக்னி வீரர்கள் என அறியப்படுவார்கள்.
இந்த அக்னி வீரர்களின் எதிர்கால பணி முன்னேற்றத்தை விரிவுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு சிவில் துறையில் வேலைவாய்ப்புக்கு தயார் படுத்தும் விதமாக திறன் அடிப்படையிலான மூன்றாண்டு கால இளநிலை பட்டப்படிப்பை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கவுள்ளது. ஆயுதப்படைகளில் பணியாற்றும் காலத்தில், அவர்கள் பெறும் திறன் பயிற்சியும் இதற்கு அங்கீகரிக்கப்படும்.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், அக்னிவீரரால் பெறப்படும் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் சாராத 50% திறன் பயிற்சி இளநிலைப் பட்டத்திற்கான மதிப்பீடாக கொள்ளப்படும். எஞ்சிய 50% மொழிகள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், கணிதம், வணிகவியல் போன்ற பல்வேறு பாடங்களில் பெறும் பயிற்சியிலிருந்து மதிப்பீடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்த ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834202
***************
(Release ID: 1834255)
Visitor Counter : 248