தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
5ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பு வெளியீடு
Posted On:
15 JUN 2022 12:37PM by PIB Chennai
அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில், நவீன, உயர் ரக தொலைத்தொடர்பு சேவையை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. 4ஜி தொழில்நுட்ப சேவைகளின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, 5ஜி சேவையைத் தொடங்க இந்தியா தற்போது தயாராக உள்ளது.
5ஜி சேவையைத் தொடங்கவும், தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும், தொலைத்தொடர்புத் துறை, அலைக்கற்றை ஏலத்தைத் தொடங்கியிருப்பதுடன், விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் 15.06.2022 அன்று வெளியிட்டுள்ளது.
அலைக்கற்றை ஏலத்தின் கூடுதல் விவரங்கள் உட்பட, இதர விஷயங்கள், இருப்பு விலை, தகுதிக்கு முந்தைய நிபந்தனைகள், பிணை வைப்புத் தொகை (ஈ.எம்.டி), ஏல விதிகள் முதலியவற்றையும், மேலே உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் https://dot.gov.in/spectrum-management/2886 என்ற தொலைத்தொடர்புத் துறை இணையதளத்தில் அணுகலாம்.
அலைக்கற்றை ஏலம், 26.07.2022 அன்று தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834137
***************
(Release ID: 1834207)
Visitor Counter : 243