மத்திய அமைச்சரவை
ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் பயன்படுத்தப்பட உள்ள ‘வழி கண்டறியும் வடிவமைப்புக் கருவி’ குறித்து இந்தியா – ஐநா இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
14 JUN 2022 4:11PM by PIB Chennai
ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் பயன்படுத்தப்பட உள்ள ‘வழி கண்டறியும் வடிவமைப்பு கருவி’ குறித்து இந்தியா – ஐநா இடையேயான ஒப்பந்த ஆலோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசங்களின் அரண்மனை என்று வர்ணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 21 அடுக்குகளைக் கொண்ட ஐநா அலுவலகம் ஜெனீவாவில் உள்ளது. பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள், போன்றவற்றில் பங்கேற்பதற்கு ஏராளமானோர் பிரதிநிதிகளாகவும், பார்வையாளர்களாகவும் வந்து சேர்கின்றனர்.
இந்த கட்டடத்தின் பல்வேறு அரங்குகளை கண்டறிவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொண்டு எளிதாக ஒவ்வொரு தளத்திலும் உள்ள தனித்தனி அரங்குகள் பற்றிய விவரங்களை ஜிபிஎஸ் அடிப்படையில் கண்டறிந்து செல்வதற்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த செயலியை உருவாக்கவும், பராமரிக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இதன்படி, ஐநா-வின் 75வது ஆண்டு விழாவையொட்டி, இந்த செயலியை உருவாக்குவதற்கான தொகையை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ளவர்கள், செல்பேசியில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833818
***************
(Release ID: 1833936)
Visitor Counter : 187
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam