பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2022-23 சந்தைப்படுத்துதல் காலத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல்
Posted On:
08 JUN 2022 4:50PM by PIB Chennai
2022-23 சந்தைப்படுத்துதல் காலத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், கீழே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவும் 2022-23 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி ஒரு குவிண்டால் நெல்லின் தற்போதைய விலையான ரூ.1940-லிருந்து ரூ.2040-ஆகவும், “ஏ” கிரேடு நெல் ரகங்கள் விலை ரூ.1960-லிருந்து ரூ.2060-ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ.3,578 ஆகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,962 ஆகவும், பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.7,755 ஆகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,600 ஆகவும், நிலக்கடலையின் விலை குவிண்டாலுக்கு ரூ.5,850 ஆகவும், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832172
***************
(Release ID: 1832209)
Visitor Counter : 706
Read this release in:
Assamese
,
Hindi
,
Kannada
,
Malayalam
,
English
,
Punjabi
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Odia
,
Telugu