நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாபெரும் கடன் வழங்கும் திட்டம்: பொதுத்துறை நிறுவனங்களால் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 07 JUN 2022 7:12AM by PIB Chennai

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின்  ஒரு பகுதியாக, நாளை, ஜூன் 8, 2022 அன்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களால் மாபெரும் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கடன் வசதி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், பல்வேறு அரசு திட்டங்களில் சேர்வது தொடர்பாகவும் நுகர்வோர் மற்றும் பொதுமக்களை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த மாவட்ட அளவிலான திட்டங்கள், அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

ஜூன் 6 முதல் 12 வரை நடைபெறும் நிதி அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐகானிக் வார கொண்டாட்டங்களின் முதல்நாளில்  புதுதில்லியின் விக்யான் பவனில் பிரதமர் கலந்து கொண்டார்.

ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் அதிகபட்ச பங்கேற்புடன் விடுதலையின் அமிர்த மகோத்சவக் கொண்டாட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதை இதுபோன்ற மாவட்ட அளவிலான திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் முதலிய திட்டங்களில் பதிவு செய்யவும், வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் நிதி கல்வியறிவு போன்ற திட்டங்களை நடத்தவும் அனைத்து மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831687

***************


(रिलीज़ आईडी: 1831742) आगंतुक पटल : 434
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu