தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தொலைத்தொடர்பு கூட்டமைப்பு கவுன்சில் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும்

Posted On: 04 JUN 2022 10:06AM by PIB Chennai

“பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில், உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணியில் இருக்கும் இந்தியா,  வளர்ச்சியிலும், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அபரிமிதமான நிலையை எட்டியிருக்கிறது“ என மத்திய தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் திரு.தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.    சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் 31 மே முதல் 3 ஜுன், 2022 வரை நடைபெற்ற தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாடு ( WSIS)2022-ல், திரு.தேவுசிங் சவுகான் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது.

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு(ITU),  ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு(யுனெஸ்கோ), ஐ.நா. வளர்ச்சித் திட்டம் (UNDP), வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா.மாநாடு (UNCTAD)  ஆகியவை இணைந்து,  WSIS செயல்பாட்டுக்கான உதவி அமைப்புகள் மற்றும் ஐ.நா.-வின் பிற அமைப்புகள் ஒத்துழைப்புடன், WSIS-க்கு கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. 

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு.தேவுசிங் சவுகான், 2023-26 காலகட்டத்திற்கான, சர்வதேச தொலைத்தொடர்பு கவுன்சிலின் வானொலி ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடுவதாகக் கூறினார்.   1869-ம் ஆண்டிலிருந்தே இந்த  கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியா,  இந்த அமைப்பில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதுடன், அமைப்பின் வளர்ச்சிக்கும் தீவிர பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

சர்வதேச தொலைத்தொடர்பு கவுன்சிலின் வானொலி ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர் பொறுப்புக்கு இந்தியாவின் வேட்பாளராக திருமதி.எம்.ரேவதி போட்டியிடுவார் என்று அறிவித்த மத்திய அமைச்சர்,  அவர் சிறந்த தொழில் ரீதியான நிபுனத்துவம் பெற்றவர் என்பதோடு, தலைமைப் பண்பு மிக்கவராகவும்,  குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்திட்டங்களை அடைய பாடுபடுவார் என்றும் தெரிவித்தார்.  

“டிஜிட்டல் பிளவை இணைத்தல்“ குறித்த உயர்மட்ட கொள்கை அமர்வுக் கூட்டங்களில் பங்கேற்ற மத்திய அமைச்சர் திரு.சவுகான்,  தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்  பற்றிய அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.    இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் பாரத்நெட் திட்டத்தின்கீழ் அதிவேக இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன்,  கிராமப்புறங்களிலும் 5-ஜி அலைவரிசை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831031

 

*****

 (Release ID: 1831097) Visitor Counter : 70