பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் 5 ஜுன் அன்று கலந்து கொள்கிறார்‘

प्रविष्टि तिथि: 04 JUN 2022 9:37AM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான் பவனில், 5 ஜுன் அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.  

‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ என்பது, பாழ்பட்டு வரும் மண் வளம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு இயக்கம் என்பதோடு, இதனை மேம்படுத்த உளப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.   மார்ச் 2022-ல் இந்த இயக்கத்தைத் தொடங்கிய சத்குரு, மோட்டார்  சைக்கிளில், 27நாடுகளில் 100நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.   ஜுன் 5-ந் தேதி, இந்த 100 நாள் பயணத்தின் 75-வது நாள் ஆகும்.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது,  இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறையின் பிரதிபலிப்பாகும்.

*****


(रिलीज़ आईडी: 1831094) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam