சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

‘இ- சஞ்சீவனி’, மத்திய அரசின் இலவச தொலை மருத்துவசேவை, தேசிய சுகாதார ஆணையத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

Posted On: 03 JUN 2022 1:05PM by PIB Chennai

இ- சஞ்சீவனி திட்டத்தை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளதாக  தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொலை மருத்துவ சேவையான இ- சஞ்சீவனியை தற்போது பயன்படுத்தி வருவோர், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை எளிதில் உருவாக்கி அதனை பயன்படுத்தவும், ஏற்கனவே பெறப்பட்ட சிகிச்சைக்கான பரிந்துரைகள், பரிசோதனை விவரங்களை தொடர்ந்து பராமரிக்க வகை செய்கிறது.

பயனாளர்கள் தங்களது சுகாதார ஆவணங்களை இ- சஞ்சீவனி திட்ட மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவதால், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

இந்த ஒருங்கிணைப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை  செயல் அதிகாரி   டாக்டர் ஆர் எஸ் சர்மா, இந்தியாவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும்  சுகாதார சேவை முறையில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதே ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திகுறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830743

***************



(Release ID: 1830763) Visitor Counter : 244