ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மே மாதத்தில் முதல் முறையாக பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தில் விற்பனை ரூ.100 கோடியைத் தாண்டியது

Posted On: 31 MAY 2022 1:59PM by PIB Chennai

சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், மத்திய அரசு 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. 31.05.2022 வரை, இயங்கும் கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இதனை செயல்படுத்தும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவு (பிஎம்பிஐ) உறுதிபூண்டுள்ளது. கடந்த 8 ஆண்டு பயணத்தில், 2014-15 ஆம் ஆண்டில் ஆண்டு விற்றுமுதல் ரூ. 8 கோடியாக இருந்தது.   இந்த மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 100 கோடிக்கு மருந்து விற்பனை  செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு மிச்சமாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ரூ.83.77 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த உன்னதத் திட்டத்தின் அரசாங்கத்தின் தலையீட்டால் மக்கள் மருந்துகளுக்கான செலவை குறைக்க முடிந்தது. தற்போது, ​​இந்த மையங்கள் 1600 க்கும் மேற்பட்ட மருந்துகள், 250 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள், ஆயுஷ் பொருட்கள் மற்றும் சுவிதா சானிடரி நாப்கின்களை (ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்)  விற்பனை செய்து வருகிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும்  மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகளை வழங்குவதற்காக 406 மாவட்டங்களில் உள்ள 3579 வட்டாரங்களுக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறிய நகரங்கள் மற்றும் வட்டாரங்களின் தலைமையகங்களில் வசிப்பவர்கள் இப்போது மக்கள் மருந்தகங்களை திறக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம், மற்றும் சிறப்பு சலுகைகள், ரூ. பெண்கள், எஸ்சி/எஸ்டி, மலை மாவட்டங்கள், தீவு மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு ரூ.2.00 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.  இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள்  எளிதில் சென்றடையும்.

இதன்படி, குருகிராம், சென்னை, கவுகாத்தி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் நான்கு கிடங்குகளை அமைப்பதன் மூலம் பிஎம்பிஐ விநியோக சங்கிலி அமைப்பை பலப்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சரியான நேரத்தில் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா முழுவதும் 39 விநியோகஸ்தர்களைக் கொண்ட வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
 

****


(Release ID: 1829887) Visitor Counter : 418