நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி அமைச்சகம் & பெரு நிறுவனங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வார விழா கொண்டாட்டம், அறிமுக பத்திரிகையாளர் சந்திப்புடன் தொடங்கியது

Posted On: 30 MAY 2022 2:47PM by PIB Chennai

சுதந்திர அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய நிதி அமைச்சகமும், பெரு நிறுவனங்கள் அமைச்சகமும் ஜூன் 6 முதல் 11,2022 வரை நடத்தவுள்ள சிறப்பு வார விழா கொண்டாட்டம் குறித்த  அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் 2022 அன்று கொண்டாடப்பட இருப்பதையொட்டி 75 வார கவுண்டவுனை பிரதமர் திரு நரேந்திர மோடி 12. மார்ச் 2021 அன்று தொடங்கிவைத்தார். சுதந்திர அமிர்தப்பெருவிழா கொண்டாட்டங்கள் 15 ஆகஸ்ட் 2023 வரை ஓராண்டு காலத்திற்கு  தொடர்ந்து நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கொவிட் 19-க்கு எதிரான போராட்டத்தில் அறியப்படாத சாதனையாளர்கள் மற்றும் சவாலான காலகட்டத்திலும் நாட்டின் நிதி அமைப்புகளை சிறப்பாக நடத்தியவர்களை போற்றும், ‘உங்களுக்கு நன்றி’ என்ற பொருள்படும் சுக்ரியா என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது.

  ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் விவரம் குறித்த மின்னணு குறிப்பு புத்தகம் ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

6 ஜூன் 2022 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த கொண்டாட்டங்களை  தொடங்கிவைக்கவுள்ளார்.  இந்த தொடக்க விழா நாடு முழுவதும் உள்ள 75 நகரங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

 ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த கொண்டாட்டத்தின் போது, பெருநிறுவனங்கள் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துறையும் தங்களது வரலாறு மற்றும் சிறப்பு இயல்புகளை  சித்தரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829415

***************


(Release ID: 1829526) Visitor Counter : 255