ஆயுஷ்
ஹைதராபாத்தில் நடந்த யோகாதின முன்னோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2022 12:21PM by PIB Chennai
சர்வதேச யோகாதினத்தையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் யோகா உத்சவ் என்ற 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்திய அரசின் ஆயுஷ் துறையும், தெலங்கானா அரசும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
இந்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி மற்றும் தெலங்கானா மாநில சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.தன்னீரு ஹரீஷ் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், யோகாவை வாழ்க்கையின் அங்கம் ஆக்குங்கள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் பேசிய அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால், யோகாவை வாழ்வின் அங்கமாக ஆக்குவதன் மூலம் நம் நாட்டின் பாரம்பரியத்தை கொண்டாட வேண்டும் என்றார். நமது மனதையும், ஆரோக்கியத்தையும் வலுப்படுத்துவதாக கூறினார்.
பல்லாயிரம் ஆண்டுகால நாகரிகத்தின் அற்புத கொடையான யோகாவை அனைவரும் கற்று கொள்ள ஊக்குவிப்பதே யோகா உத்சவ் நிகழ்ச்சியின் நோக்கம் என்று அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1828737)
வருகையாளர் எண்ணிக்கை : 203