பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 23 MAY 2022 4:57PM by PIB Chennai

அதிபர் பைடன் அவர்களே, அதிபர் கிஷிடா அவர்களே,

காணொலி மூலம் கலந்துகொண்டுள்ள தலைவர்களே,

இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இன்று நான் உங்களுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய ஊக்கியாக இந்தப் பிராந்தியத்தை மாற்றும் நமது ஒருங்கிணைந்த தீர்மானத்தின் உறுதிப்பாடாக இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு திகழ்கிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிபர் பைடன் அவர்களுக்கு நன்றி. உற்பத்தி, பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மையமாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் திகழ்கிறது. நூற்றாண்டுகளாகவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு வர்த்தகத்தை கொண்டுவரும் மிகப்பெரும் மையமாக இந்தியா திகழ்கிறது என்ற உண்மையை வரலாறு கண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான வர்த்தக துறைமுகமானது, எனது சொந்த மாநிலமான குஜராத்தின் லோத்தல் பகுதியில் அமைந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, பிராந்தியத்தின் பொருளாதார சவால்களுக்கு பொதுவான மற்றும் புதுமையான தீர்வுகளை நாம் காண வேண்டியது அவசியம்.

தலைவர்களே,

உள்ளடக்கிய மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பை கட்டமைக்க உங்கள் அனைவருடனும் இணைந்து இந்தியா செயல்படும். எதிர்திறன் கொண்ட விநியோக சங்கிலியில் மூன்று முக்கிய தூண்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதாவது, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உரிய நேரத்தில் முடித்தல் ஆகியவையே ஆகும். இந்த மூன்று தூண்களையும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் வளத்தை ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கவும் இந்த அமைப்பு உதவும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

***


(Release ID: 1827867) Visitor Counter : 186