பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் வதோதராவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் ஆலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் முகாமில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
19 MAY 2022 2:47PM by PIB Chennai
குரு ஸ்ரீ கியான்ஜீவன்தாஸ் ஸ்வாமி, குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும், நாடாளுமன்றத்தில் எனது சக நண்பருமான திரு சி. ஆர். பாட்டீல், குஜராத் மாநில அமைச்சர்கள் மனீஷாபென், வினுபாய், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பென், வதோதரா மாநகராட்சித் தலைவர் கேயூர்பாய், சிறப்பு அழைப்பாளர்கள், மதிப்பிற்குரிய துறவிகள், பக்தர்கள், பெருந்திரளாக கூடியுள்ள இளம் தலைமுறையினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
சமுதாயத்தின் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ச்சியான குணநலன்களை கட்டமைப்பதன் மூலம் எந்த ஒரு சமுதாயமும் உருவாகிறது என்பதை நமது முனிவர்களும் வேதங்களும் கற்றுத் தந்துள்ளன. நமது வளமான பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அதன் நாகரீகம், கலாச்சாரம், நெறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே இந்த இளைஞர் முகாம் என்பது நமது இளைஞர்கள் மற்றும் சமுதாயத்தின் எழுச்சிக்கான ஓர் நல்ல முயற்சியாகும்.
நண்பர்களே,
விடுதலையின் அமிர்த மகோத்சவத்தை நாடு கொண்டாடும் வேளையில் இந்த முகாம் நடைபெறுகிறது. புதிய இந்தியாவைக் கட்டமைக்க, ஒன்றிணைந்த உறுதிப்பாடுகளையும், முயற்சிகளையும் இன்று நாம் மேற்கொண்டு வருகிறோம். புதிய, நவீன, எதிர்காலத்தை நோக்கிய அடையாளங்களோடு, பண்டைய காலங்களின் வலுவான அடித்தளத்தில் வேரூன்றிய பாரம்பரியங்களோடு ஓர் புதிய இந்தியா! புதிய அணுகுமுறையையும், பழமை வாய்ந்த கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்வதுடன் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் வழிநடத்தும் ஓர் புதிய இந்தியா.
எந்தத் துறையிலும் எங்கெல்லாம் சவால்கள் எழுகிறதோ, அங்கெல்லாம் இந்தியா நம்பிக்கை அளிக்கிறது, எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கின்றதோ அவற்றுக்கு இந்தியா தீர்வு காண்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளே வழங்குவது முதல் உலகளாவிய அமைதியின்மை மற்றும் மோதல்களுக்கு இடையே விநியோக சங்கிலி சீர்குலைந்த நிலையில் தற்சார்பு இந்தியா என்ற நம்பிக்கையுடன் அமைதிக்கான திறமையான பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது. ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் யோகாவின் பாதையை நாம் காண்பித்து வருவதுடன் ஆயுர்வேதத்தின் சக்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மென்பொருள் முதல் விண்வெளி வரை புதிய எதிர்காலத்திற்கான தேசமாக நாம் வளர்ந்து வருகிறோம்.
நண்பர்களே,
இன்று நாட்டில் அரசின் பணி முறையும், சமுதாயத்தில் சிந்தனையும் மாறியிருப்பதோடு, முக்கியமாக மக்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. புதிய நிறுவனங்களின் உலகில் இந்தியாவின் வளர்ச்சி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. புதிய நிறுவனங்களில் சூழலியலில் மூன்றாவது மிகப்பெரும் நாடாக இந்தியா இன்று திகழ்வதோடு, நமது இளைஞர்கள் அதனை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின்போது பாரதத் தாயின் நல்வாழ்த்துக்களுடன் இன்றைய முகாமிலிருந்து பல அற்புதமான கருத்துக்களை நீங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நன்றி!
வணக்கம்.
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
*********
(Release ID: 1827358)
Visitor Counter : 185
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam