அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவி்ன் எதிர்கால பொருளாதாரத்துக்கு வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் முக்கியமானவை - மத்திய இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
20 MAY 2022 12:30PM by PIB Chennai
இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்துக்கு வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் முக்கியமானவை என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் ராயல் நகரமான மைசூருவில், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் வேகமாக வளர்ந்துள்ளன. காலாவதியான உபகரணங்களின் பயன்பாடு, முறையற்ற உள்கட்டமைப்பு, பரந்த அளவிலான சந்தைகளை விவசாயிகள் எளிதில் அணுக முடியாதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இந்திய விவசாயத்தில் நிலவி வந்ததாகவும், பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் அவை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
விவசாயத்தில் முதலீடு செய்வது லாபகரமான மற்றும் பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று இந்திய இளம்தொழில் முனைவோர் பலரும் உணர ஆரம்பித்துள்ளனர் என்றும், இது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைச்சர் ஜிதேந்திரசிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826864
***************
(रिलीज़ आईडी: 1826930)
आगंतुक पटल : 227