பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையால் முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 18 MAY 2022 1:02PM by PIB Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை,  டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையால், ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில், கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து முதல் முறையாக  செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்படையால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வானிலிருந்து செலுத்தி பரிசோதிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனையை நிகழ்த்திய டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய குழுவினருக்கும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதில் இந்தியா உயர் திறனை எட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டியும்,  இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய ஏவுகணை இந்திய கடற்படையின் போர்த் திறனை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-------


(रिलीज़ आईडी: 1826407) आगंतुक पटल : 305
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Odia , Telugu , Malayalam