மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை –2018க்கான திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 18 MAY 2022 1:14PM by PIB Chennai

உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை–2018க்கான  திருத்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடுமுழுவதும் 01.04.2023 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான கூடுதல் மூலப்பொருட்கள் இருப்பு வைக்க அனுமதித்தல்

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது என்ற இலக்கை 2030 என்பதிலிருந்து நிதியாண்டு 2025-26க்கு மாற்றுதல்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல்

தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்

குறிப்பிட்ட பிரிவுகளில் உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்தல் போன்றவை உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியமான திருத்தங்களாகும்

உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கூடுதலான மூலப்பொருட்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்காப்பு இந்தியாவை மேம்படுத்தும். மேலும் 2047க்குள் எரிசக்தி சுதந்திரம் உள்ளதாக இந்தியா மாறவேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஊக்கமளிக்கும்

 

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826265

***************


(Release ID: 1826349) Visitor Counter : 1031