பிரதமர் அலுவலகம்
பிரதமர் மோடி குஷிநகரில் உள்ள மஹாபரி நிர்வாணா ஸ்தூபியில் வழிபாடு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2022 7:19PM by PIB Chennai
2566-வது புத்த பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மஹாபரி நிர்வாணா ஸ்தூபியில் பிரதமர் மோடி நேற்று மாலை வழிபாடு செய்தார். முன்னதாக நேபாளத்தின் லும்பினி நகரில் அமைக்கப்பட்டு வரும் இந்திய சர்வதேச வழிபாட்டு மற்றும் யோகா மையத்துக்கு, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும், இந்திய பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினர்.
பிரதமர் மோடி டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது , குஷி நகரின் மஹாபரி நிர்வாணாஸ்தூபியில் வழிபாடு செய்தேன். எங்களின் அரசு குஷிநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்க்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும், யாத்ரீகர்களும் இங்கு குஷிநகருக்கு வருகை தருவார்கள்.
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1826252)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam