சுற்றுலா அமைச்சகம்
‘இளையோர் சுற்றுலா மன்றங்கள்’ நிறுவும் சுற்றுலா அமைச்சகத்தின் முன்முயற்சிக்கு சிபிஎஸ்இ ஆதரவு கிடைத்துள்ளது
Posted On:
12 MAY 2022 2:09PM by PIB Chennai
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இளையோர் சுற்றுலா மன்றங்கள்’ நிறுவும் முன்முயற்சியை சுற்றுலா அமைச்சகம் செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும், சுற்றுலாவுக்கான ஆர்வத்தை மேம்படுத்தவும் உதவி செய்ய இளம் தூதர்களை உருவாக்கி வளர்ப்பது இந்த மன்றங்களின் தொலைநோக்குப் பார்வையாகும். இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த இளம் தூதர்கள் கிரியா ஊக்கியாக இருப்பார்கள்.
சுற்றுலா அமைச்சகத்தின் இந்த முன்முயற்சிக்கு ஆதரவு தர மத்திய பள்ளிக்கல்வி வாரியம் – சிபிஎஸ்இ முன்வந்துள்ளது. இத்தகைய இளையோர் சுற்றுலா மன்றங்களை அமைப்பது தொடர்பாக சிபிஎஸ்இ-உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, பள்ளிகளில் இத்தகைய மன்றங்கள் அமைப்பது தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் என்றும் பிரதமரின் ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கை கட்டமைக்கும் என்றும் கூறினார்.
மறுபக்கம் இளைஞர்கள், சுற்றுலா தூதர்களாக வரும் போது உலகின் விரும்பத்தக்க சுற்றுலா இடமாக இந்தியாவை மாற்றும் என்றும் இது பொருளாதாரத்தில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824684
***************
(Release ID: 1824870)
Visitor Counter : 211