சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சர்வதேச செவிலியர் தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
12 MAY 2022 2:22PM by PIB Chennai
சர்வதேச செவிலியர் தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று உரையாற்றினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்திய நர்சிங் கவுன்சில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சுகாதார கவனிப்பில் செவிலியரின் அக்கறையையும், சேவையையும் கவுரவிப்பதற்காக நவீன செவிலியர் பணியின் நிறுவனரான பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாள் சர்வதேச செவிலியர் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
செவிலியர்களின் அர்ப்பணிக்கப்பட்ட தேச சேவைக்காக அவர்களை பாராட்டிய டாக்டர் பாரதி பிரவின் பவார், மருத்துவருக்கும், நோயாளிக்கும் இடையே மிகமுக்கிய தொடர்பாளர்களாக இருப்பவர்கள் செவிலியர்கள் என்றார். முகச்சுளிப்பு இல்லாமல் இரவானாலும், பகலானாலும் நோயாளிகளின் தேவைகளை உணர்ந்து செயல்படும் செவிலியர்கள் சிறப்புமிக்கவர்கள் என்றும் அவர் கூறினார். இவர்கள் சுகாதாரத்துறையின் முதுகெலும்புகள் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824688
***************
(रिलीज़ आईडी: 1824836)
आगंतुक पटल : 180