சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நாட்டின் முதலாவது “அமிர்த நீர்நிலை”யை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி நாளை தொடங்கிவைப்பார்

Posted On: 12 MAY 2022 2:22PM by PIB Chennai

நாட்டின் முதலாவது “அமிர்த நீர்நிலையை 2022 மே 13 அன்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வியும், உத்தரப்பிரதேச ஜல்சக்தி அமைச்சர் திரு ஸ்வதந்த்ர தேவ் சிங்கும் ராம்பூரின் (உ.பி.) பட்வாய் என்ற இடத்தில்    தொடங்கிவைப்பார்கள்.

 இந்த அற்புதமான “அமிர்த நீர்நிலைபிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்குவிப்பின்படியும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழிகாட்டுதல்படியும் அமைக்கப் பட்டிருப்பதாக திரு நக்வி இன்று புதுதில்லியில் தெரிவித்தார்.

சாமான்ய மக்களின், கிராமவாசிகளின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பு, கிராம பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் விரைந்த முயற்சி மிகவும் குறுகிய காலத்தில் இந்த பெரிய “அமிர்த நீர்நிலைதிறக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறினார்.

பட்வாயின் இந்த “அமிர்த நீர்நிலைசுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் தண்ணீர் சேமிப்புக்கு உதவுவது மட்டுமின்றி அருகில் உள்ள பகுதி மக்களுக்கான ஈர்ப்பு சக்தியாகவும் இருக்கும் என்று திரு நக்வி தெரிவித்தார்.  இந்த “அமிர்த நீர்நிலையில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் படகு சவாரியும் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த  ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824687

***************



(Release ID: 1824728) Visitor Counter : 164