நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சட்டபூர்வ அளவியல் சட்டம், 2009ஐ குற்றமற்றதாக்குவது பற்றி விவாதிக்க தேசிய பயிலரங்கம்

Posted On: 08 MAY 2022 12:26PM by PIB Chennai

2009-ம் ஆண்டின் சட்டபூர்வ அளவீட்டுச் சட்டத்தில் குற்றம் அம்சங்களை நீக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடம் இருந்தும் கருத்து கேட்கும் வகையில் நுகர்வோர் விவகாரத் துறை மே 9 ஆம் தேதி ஒரு நாள் 'சட்ட அளவீட்டுச் சட்டம், 2009' என்ற பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. நுகர்வோர் மற்றும் தொழில்களில் சமநிலை. தேவையற்ற குறுக்கீடுகளை நீக்கி எளிதாக வணிகம் செய்யும் வகையில் இந்தச் சட்டத்தை மாற்ற பரிசீலிக்கப்படுகிறது.

கூடுதலாக, வணிக நிறுவனங்கள் மீதான சுமையை அதிகரிக்காமல், அவற்றின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்காமல், தரமற்ற எடை அளவீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம்  நுகர்வோர் பாதிக்கப்படாமல்  இருப்பதை உறுதிசெய்வதே இந்தப் பயிலரங்கின்  நோக்கமாகும். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், சட்ட அளவியல் சட்டத்தை குற்றமற்றதாக்குவதன் மூலம் வெற்றியைக் கண்டறிவதற்கான ஆலோசனையை பெறுவதே இதன் நோக்கமாகும்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய இணையமைச்சர் திரு அஷ்வினி சௌபே மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திருமிகு. சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823619

*********



(Release ID: 1823636) Visitor Counter : 291