பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2022 1:55PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :
"மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட தீ விபத்து, மிகுந்த வருத்தமளிக்கிறது. துயரமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1823486)
வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu