பிரதமர் அலுவலகம்

கோதுமை விநியோகம், இருப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 05 MAY 2022 8:43PM by PIB Chennai

கோதுமை விநியோகம், இருப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்

இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட அதிக வெப்பநிலை பயிர் உற்பத்தியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. கோதுமை கொள்முதல் மற்றும் ஏற்றுமதியின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியாவின் விவசாயப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக இந்தியாவை உருவாக்கும் வகையில், தர நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு அலுவலர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சந்தை விலைகள் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர், ஆலோசகர்கள், கேபினட் செயலர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் விவசாயத் துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

***************



(Release ID: 1823186) Visitor Counter : 144