பிரதமர் அலுவலகம்

பிரதமரின் துணை தலைமையில் பெர்லினில் வர்த்தக வட்டமேஜை கூட்டம்

Posted On: 02 MAY 2022 10:37PM by PIB Chennai

ஜெர்மனி பிரதமர் திரு ஓலப் ஸ்கோல்ஸ் உடன் இணைந்து வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துணை தலைமை வகித்தார். தமது உரையின் போது, அரசால் மேற்கொள்ளப்படும் விரிவான சீர்திருத்தங்களை பிரதமர் வலியுறுத்தியதோடு, இந்தியாவில் அதிகரித்து வரும் புதிய நிறுவனங்கள் மற்றும் அதிக முதலீட்டு நிறுவனங்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைஞர்களுடன் முதலீடு செய்யுமாறு வர்த்தக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அரசுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் மற்றும் இரு தரப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, பருவநிலை ஒத்துழைப்பு, விநியோக சங்கிலிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்தனர்.

கீழ்க்காணும் வர்த்தக தலைவர்கள் இந்த வட்ட மேஜை கூட்டத்தில் கலந்துகொண்டனர்:

இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழு:

•           சஞ்சீவ் பஜாஜ் (இந்திய பிரதிநிதிகள் குழுவின் தலைவர்), நியமிக்கப்பட்ட தலைவர், சிஐஐ தலைவர் மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்

•           பாபா என். கல்யாணி, பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்

•           சி. கே. பிர்லா, சி கே பிர்லா குழுமத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

•           புனித் சட்வால், இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

•           சலீல் சிங்கால், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்

•           சுமந்த் சின்ஹா, ரினியூ பவர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், அசோசாமின் தலைவர்

•           தினேஷ் காரா, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்

•           சி.பி குர்நானி, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

•           தீபக் பக்ளா, இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர்

 

ஜெர்மனியின் வர்த்தக பிரதிநிதி குழுவினர்:

•           ரோலண்ட் புஷ், ஜெர்மனி பிரதிநிதி குழுவின் தலைவர், சீமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெர்மனி வர்த்தகத்திற்கான ஆசிய பசுபிக் குழுவின் தலைவர்

•           மார்ட்டின் ப்ரூடர்முல்லர், பி.ஏ.எஸ்.எஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு தலைவர்

•           ஹெர்பர்ட் டியஸ், வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் மேலாண்மைக் குழு தலைவர்

•           ஸ்டீஃபன் ஹார்டங், பாஷ் நிறுவனத்தின் மேலாண்மைக் குழு தலைவர்

•           மரிகா லுலே, ஜி.எஃப்.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர்

•           க்ளாஸ் ரோஸன்ஃபெல்டு, ஷேஃப்லர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

•           கிறிஸ்டியன் சியூவிங், டாஷ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி

•           ரால்ஃப் வின்டர்கெர்ஸ்ட், கீஸெக் + டெவிரியன் நிறுவனத்தின் மேலாண்மைக் குழு தலைவர்

•           ஜூர்ஜென் ஜெஸ்கி, எனெர்கான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

***************



(Release ID: 1822300) Visitor Counter : 172