பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று கிராம சபைகளிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 APR 2022 6:28PM by PIB Chennai

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு கிரிராஜ் சிங் அவர்களே, இந்த மண்ணின் மைந்தன் மற்றும் எனது சகா டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகா திரு ஜுகல் கிஷோர் அவர்களே, அனைத்து மக்கள் பிரதிநிதிகள், சகோதர சகோதரிகளே!

நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நல்வாழ்த்துக்கள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கு இன்று ஒரு முக்கியமான நாள். என் கண் முன்னே மக்கள் பெருங்கடலைக் காண்கிறேன். பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் நிலத்தில் இதுபோன்ற ஒரு கம்பீரமான காட்சியை இந்திய மக்கள் பார்க்க முடிகிறது. உங்களின் அன்பு, உற்சாகம் மற்றும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான உறுதிக்காக இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

இந்த நிலம் எனக்குப் புதிதல்ல, நான் உங்களுக்கு புதியவன் அல்ல. பல வருடங்களாக இந்த பகுதியின் ஒவ்வொரு மூலை முடுக்குடனும் நான் தொடர்பு கொண்டுள்ளேன். 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு மற்றும் மின்சாரம் தொடர்பான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இது ஒரு அற்புதமான தருணம். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த முயற்சிகள் ஜம்மு காஷ்மீரில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்.

நண்பர்களே,

இன்று பல குடும்பங்கள் கிராமங்களில் தங்கள் வீடுகளுக்கான சொத்து அட்டைகளை பெற்றுள்ளன. இந்த 'சுவாமித்வா' அட்டைகள் கிராமங்களில் புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்கும். இன்று 100 மக்கள் மருந்தகங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை வழங்கும் இடங்களாக மாறும்.

2070-ம் ஆண்டுக்குள் நாட்டை கரியமிலத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற நாட்டின் உறுதிக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் இன்று அந்த திசையில் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது. நாட்டின் முதல் கரியமில வெளியேற்றம் இல்லா பஞ்சாயத்தை நோக்கி பள்ளி பஞ்சாயத்து முன்னேறி வருகிறது.

உலகின் முக்கிய பிரமுகர்கள் கிளாஸ்கோவில் கூடியிருந்த போது, கரியமில குறைப்பு பற்றி நிறைய பேச்சுகள், அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் செய்யப்பட்டன. இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்தான பள்ளி பஞ்சாயத்து கார்பன் நியூட்ரல் இலக்கை நோக்கி இந்தியா நகர்கிறது. நாட்டின் கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் இணையும் வாய்ப்பும் இன்று பள்ளி கிராமத்தில் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த மகத்தான சாதனை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

இங்கு மேடைக்கு வருவதற்கு முன், பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் நான் இருந்தேன். அவர்களின் கனவுகள், தீர்மானங்கள் மற்றும் உன்னத நோக்கங்களை என்னால் உணர முடிந்தது. தில்லியில் உள்ள செங்கோட்டையிலிருந்து நான் விடுத்த அழைப்பை ஏற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பள்ளி மக்கள் 'அனைவரின் முயற்சி' என்றால் என்ன என்பதைக் காட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும் 20 ரொட்டி அல்லது 30 ரொட்டி சேகரித்து, கடந்த 10 நாட்களாக இங்கு வந்திருந்த அனைவருக்கும் கிராம மக்கள் உணவளித்தனர். 'ஒவ்வொருவரின் முயற்சி' என்றால் என்ன என்பதை நிஜத்தில் காட்டியிருக்கிறீர்கள்! இங்குள்ள அனைத்து கிராம மக்களையும் வணங்குகிறேன்.

***



(Release ID: 1819591)


(Release ID: 1821526) Visitor Counter : 228