மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஆலோசனை மேம்பாட்டு மையம் மற்றும் அதன் மனித வளம், அசையும் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகளுடன் மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 APR 2022 4:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்காணும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

       I.       சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் 13 பதவிகளை உருவாக்குவதன் மூலம், ஆலோசனை மேம்பாட்டு மையத்தில் தற்போது பணியாற்றும் 13 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

      II.       புதுதில்லி இந்தியா ஹேபிடேட் மையத்தில் ஆலோசனை மேம்பாட்டு மையம் அமைந்துள்ள இடம், இந்திய ஹேபிடேம் மையத்திடமே திருப்பி அளிக்கப்படும்.  அதன்மூலம் கிடைக்கும் தொகை இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் சேர்க்கப்படும்.

      III.       இணைப்புக்குப் பிறகு ஆலோசனை மேம்பாட்டு மையத்தின் அனைத்து அசையும் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் சிஎஸ்ஐஆர் நிறுவனத்திற்கு மாற்றப்படும். 

குறைந்தபட்ச அரசாங்கம் – அதிகபட்ச ஆளுகை என்ற பிரதமரின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப அறிவியல் தொழில்நுட்பத் துறையை சீரமைக்க இந்த இருஅமைப்புகளின் இணைப்பு உதவும். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820517

***************


(Release ID: 1821174) Visitor Counter : 156