பிரதமர் அலுவலகம்
மும்பையில் நடைபெற்ற விழாவில் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பிரதமர் பெற்றார், நாட்டு மக்கள் அனைவருக்கும் விருதை அர்ப்பணிப்பதாக அறிவிப்பு
Posted On:
24 APR 2022 7:20PM by PIB Chennai
மும்பையில் இன்று நடைபெற்ற மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது, தேசத்தை கட்டியெழுப்புவதில் சிறந்த பங்களிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு பிரத்யேகமாக வழங்கப்படும். மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத்சிங் கோஷ்யாரி, மங்கேஷ்கர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
"பல தலைமுறையினருக்கு அன்பையும் உணர்வுகளையும் பரிசாகக் கொடுத்த லதா சகோதரியிடம் இருந்து சகோதரியின் அன்பைப் பெற்றதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்க முடியும்," என்று பிரதமர் தமது உரையில் கூறினார்.
“நாட்டு மக்களுக்கும் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். லதா சகோதரி மக்களுக்கு சொந்தமானவர் என்பது போல, அவர் பெயரில் எனக்கு வழங்கப்பட்ட இந்த விருது மக்களுக்கும் சொந்தமானது,” என்று அவர் தெரிவித்தார்.
லதா மங்கேஷ்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர், "சுதந்திரத்திற்கு முன்பு அவர் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார். மேலும், இந்த 75 ஆண்டுகால நாட்டின் பயணமும் அவரது குரலுடன் தொடர்புடையது," என்றார்.
"லதா அவர்கள் இசையை வணங்கினார், தேசபக்தி மற்றும் தேச சேவை அவரது பாடல்களால் உத்வேகம் பெற்றது", என்று கூறிய பிரதமர், "ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் மெல்லிசை வெளிப்பாடு போல் அவர் இருந்தார்", என்று கூறினார்.
“லதா அவர்களின் இசைக்குறிப்புகள் முழு நாட்டையும் ஒன்றிணைக்க பணியாற்றின. இந்தியாவின் கலாச்சார தூதராக உலகளவில் அவர் திகழ்ந்தார்”, என்று பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819600
*******
(Release ID: 1819630)
Visitor Counter : 191
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam