இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2021ஐக் குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கய்ய நாயுடு நாளை தொடங்கிவைப்பார்
Posted On:
23 APR 2022 3:23PM by PIB Chennai
இரண்டாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2021ஐ பெங்களூரு ஸ்ரீ காண்டீரவா உள்விளையாட்டரங்கில் குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கய்ய நாயுடு ஞாயிறன்று தொடங்கிவைப்பார். கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய உள்துறை அமமைச்சர் திரு அமித் ஷா, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இணையமைச்சர் திரு நிதிஷ் ப்ரமாணிக் கர்நாடக இளையோருக்கு அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு நாராயண கௌடா ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள். கர்நாடகாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கலாச்சார நிகழ்வுகளைக் காண்பதற்கு நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் உட்பட 2500 பேர் அரங்கத்தில் கூடுவார்கள். மாநிலத்தின் தொழிநுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பார்வையாளர்களைக் கவரும் லேசர் ஒளிக்கற்றை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கர்நாடக மாநில அரசு மற்றும் இந்திய விளையாட்டுக்கள் ஆணையம் ஆகியவற்றின் ஒப்பற்ற ஆதரவுடன் ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2021 இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகவும் பெருந்தொற்றுக்குப்பின் முதன்முறையாகத் திரளான மக்கள் பங்கேற்கும் போட்டிகளாகவும் இருக்கும்.
விளையாட்டு அரங்கிற்கு வெளியே பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவையாகும். விளையாட்டு வீரர்களை அழைத்துவர மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும். மல்லக்கம்பா, யோகாசனம்பி போன்ற உள்ளூர் விளையாட்டுக்கள் உள்ளிட்ட 20 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். 200க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3879 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.
தொடக்கவிழா பற்றி தெரிவித்த மாநில அமைச்சர் திரு நாராயண கௌடா, " மத்திய மாநில அமைச்சர்களுடன் பிரகாஷ் படுகோனே, பங்கஜ் அத்வானி, அஞ்சு பாபி ஜார்ஜ், அஸ்வினி நாச்சப்பா, ரீத் ஆப்ரஹாம் உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு ஆளுமைகளும் பங்கேற்பார்கள்" என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819281
********
(Release ID: 1819352)
Visitor Counter : 185