சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒன்றிய அளவிலான ஆயுஷ்மான் பாரத் சுகாதார மேளாக்களில் 4 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்

Posted On: 22 APR 2022 12:47PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சுதந்திரத்தின் 75 ஆண்டுப் பெருவிழாமையொட்டி,  2022 ஏப்ரல் 16 முதல் 22 வரை ஆயுஷ்மான் பார்த், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இந்த விழாக்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் இந்த மையங்களுக்கு வருகை தந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்கள்.

2022 ஏப்ரல் 18 முதல் 22 வரை ஒன்றிய அளவிலான சுகாதார மேளாக்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும்  நல்வாழ்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த மேளாக்களில் 4-வது நாளான ஏப்ரல் 21 அன்று 4 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மேலும்,  66,000-க்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 18,000 தங்க அட்டைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 30 ஒன்றியங்களில்  நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் 3,801 சுகாதார அட்டைகளும் 549 தங்க அட்டைகளும் வழங்கப்பட்டன. 3,613 பேருக்கு இணையவழி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. 2,529 பேருக்கு கண்புரை பரிசோதனையும் 14,661 பேருக்கு உயர் ரத்த அழுத்த பரிசோதனையும், 9,786 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனையும் செய்யப்பட்டன. 11 இடங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. உறுப்பு தானத்திற்கு 7 பேர் பதிவு செய்தனர். 650 கருவுற்ற பெண்களுக்கு ஹெப்படைட்டிஸ் பி (மஞ்சள் காமாலை) பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818934

***************

(Release ID: 1818934) 




(Release ID: 1819019) Visitor Counter : 175