ஆயுஷ்

குஜராத்தின் காந்திநகரில் உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டின்போது ஆயுஷ் சமையல் வல்லுனர் போட்டி, ஆயுர்வேத பொருட்களின் அங்காடிகள் ஏராளமான மக்களை கவர்ந்தன

Posted On: 21 APR 2022 4:23PM by PIB Chennai

குஜராத்தின் காந்திநகரில் 3 நாள்கள் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு உச்சிமாநாட்டில் அரங்குகளிலும், அமர்வுகளிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் இரண்டாவது நாள் நடைபெற்ற சுவாரசியமான பல்வேறு கண்காட்சிகளும் ஆயுஷ் துறையின் புதிய தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவையும் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தன.

ஆரோக்கியமான உணவு மற்றும் ஆயுஷ் ஆகாரத்தை பிரபலப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஆயுஷ் சமையல் வல்லுனர் போட்டி பார்வையாளர்களின் சிறப்புக் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 போட்டியாளர்களில் 30 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். பருப்பு வகைகள் அடிப்படையிலான உணவுப் பொருள், சிறுதானியங்கள் அடிப்படையிலான உணவுப் பொருள், பயறு வகைகள் / கொட்டை வகைகள் அடிப்படையிலான உணவுப் பொருட்கள், பழங்கள் / காய்கறிகள் அடிப்படையிலான உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் அடிப்படையிலான உணவு வகைகள், கலப்பு உணவு வகைகள் ஆகிய 6 வகைமைகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.1 லட்சம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றவர்களுக்கு முறையே ரூ.75,000, ரூ.50,000 என ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818717

 

***************



(Release ID: 1818748) Visitor Counter : 171