பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

15 ஆவது குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியை விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்; குடிமக்களை மையப்படுத்துவது 2047-ல் இந்தியாவின் நிர்வாக மாதிரியை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்

Posted On: 20 APR 2022 4:37PM by PIB Chennai

குடிமக்களை மையப்படுத்துவது 2047-ல் இந்தியாவின் நிர்வாக மாதிரியை தீர்மானிக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று 15 – ஆவது குடிமைப் பணிகள் தின கொண்டாட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.  புதிய நிர்வாக மாதிரியில் குடிமைப் பணியாளர்களுக்கு சாதகமான வழிமுறையாக இருப்பது  குடிமக்களை நேசிக்கும் அணுகுமுறை மட்டுமே என்று அவர் பேசுகையில் கூறினார்.  பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கோளை எடுத்துரைத்த அமைச்சர், “குடிமைப்பணிகள் தினம் என்பதன் உண்மையான பொருள் சாமானிய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகும்.  ஒவ்வொரு குடிமைப் பணியாளரும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வர உறுதியேற்க வேண்டும்” என்றார். 

“2047-ல் இந்தியாவின் தொலைநோக்கு குடிமக்களையும்-அரசையும் நெருக்கமாக கொண்டு வருவது” என்ற குடிமைப் பணிகள் தினம் 2022 –க்கான மையப் பொருள் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், பல ஆண்டுகளாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருப்பதாகவும், இதனை நிறைவேற்றுவதற்கு குடிமைப் பணியாளர்கள் தீவிரமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.   2047-ல் சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டு கொண்டாடப்படும் போது, இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதற்கு தற்போதுள்ள அதிகாரிகள் தங்களின் திறனை அதிகரித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வரும் 25 ஆண்டுகளில் தீவிர செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான குடிமைப் பணிகள் தின விருதுகளின் முன்முயற்சிகள் குறித்த கண்காட்சியையும் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818394

***************



(Release ID: 1818406) Visitor Counter : 142