சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வட்டார அளவிலான ஆயுஷ்மான் பாரத் சுகாதார திருவிழாக்களில் ஏப்ரல் 19 அன்று 3 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Posted On: 20 APR 2022 3:47PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் 4-வது ஆண்டு விழாவை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 22, 2022 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொண்டாடுகிறது.

நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இது மேற்கொள்ளப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், முதன்மை சுகாதாரச் செயலாளர்கள்/மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள், மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

குறைந்த செலவில் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

ஏப்ரல் 18-22, 2022 வரை ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு வட்டத்தில் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் சுகாதார திருவிழாக்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

சுகாதார திருவிழாவின் இரண்டாவது நாளில், 3 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள சுமார் 490 பகுதிகளில் சுகாதார திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 60,000 க்கும் மேற்பட்ட ஆபா சுகாதார அடையாள எண்கள் உருவாக்கப்பட்டு 21,000 பிரதமரின் மக்கள் மருந்தக திட்ட தங்க அட்டைகள் வழங்கப்பட்டதோடு,  உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றுக்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

16 ஏப்ரல் 2022 அன்று ஒரே நாளில் மட்டும் ஆயுஷ்மான் பாரத் - உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் இ-சஞ்சீவனி இயங்குதளம் மூலம் 3 லட்சம் தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், ஒரே நாளில் 1.8 லட்சம் தொலை ஆலோசனைகள் என்ற அதன் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. ஏப்ரல் 19 அன்று நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ ஆலோசனைகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1818374

***************(Release ID: 1818403) Visitor Counter : 98