ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கம்: வெற்றிக்கதை
கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தின் 32 கிராமப் பஞ்சாயத்துக்களில் இளஞ்சிவப்பு கழிப்பறைகள்
Posted On:
18 APR 2022 2:26PM by PIB Chennai
எளிதாகவும், பாதுகாப்பாகவும் துப்புரவு வசதியை நோக்கியும் அதே சமயம் இளம்பெண்களிடையே மாதவிடாய் நாட்களில் சங்கோஜத்தை நீக்கவும் கர்நாடகாவில் கடாக் மாவட்டம் முழுவதும் 32 கிராமப் பஞ்சாயத்துக்களில் இளஞ்சிவப்பு கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.
இவற்றில் 20 கழிப்பறைகள் கட்டப்பட்டு விட்டன. எஞ்சிய 12 முடிவடையும் நிலையில் உள்ளன. ஒவ்வொரு கழிப்பறைக்கும் செலவு ரூ.6 லட்சம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலிருந்து ரூ.3 லட்சம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்திலிருந்து ரூ.1.8 லட்சம், 15-வது நிதிக்குழுவின் கிராமப் பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.1.2 லட்சம்)
இத்தகைய கழிப்பறை முதன் முதலாக கே.எச்.பாட்டீல் பெண்கள் முதுநிலை தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்த பின் மற்ற கிராமங்களிலும் பிரதிபலித்தது.
போதிய தண்ணீர் விநியோகம், விளக்கு வசதி, உடை மாற்றும் அறை மற்ற பிற வசதிகளைக் கொண்டதாக இந்தக் கழிப்பறைகள் உள்ளன. ஒவ்வொரு கழிப்பறையிலும் மாதவிடாய் கால கழிவுகளைப் பாதுகாப்புடன் எரிப்பதற்கான சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
கழிப்பறைகள் முறையாக பயன்படுத்தப்படுவது மற்றும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய பள்ளி மேம்பாடு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரின் ஈடுபாட்டுடன் பள்ளி அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு முன்முயற்சி காரணமாக தூய்மையான கிராமங்கள் என்ற கனவு நனவாகி உள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817735
***************
(Release ID: 1817744)
Visitor Counter : 162