சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

கைவினைப் பொருட்கள் கண்காட்சி போன்ற முன்முயற்சிகள், சுயசார்பு இந்திய இயக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது : அனுராக் தாக்கூர்

Posted On: 17 APR 2022 3:21PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு  மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு  அனுராக் தாக்கூர், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி முன்னிலையில் 'கைவினைப் பொருட்கள் கண்காட்சி' - யின் 40-வது பதிப்பை மும்பையில் இன்று  தொடங்கி வைத்தார்.

'சுதேசி' தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கான நம்பகமான தலமான கைவினைப்பொருள் கண்காட்சியின்  40-வது பதிப்பு, மும்பையில் உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில், பாந்த்ரா-குர்லா வளாகத்தில் ஏப்ரல் 16-ம் தேதி முதல் 27-ம் தேதி  வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தாகூர், இது  போன்ற முன்முயற்சிகள் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு வலுசேர்ப்பதாக கூறினார். இந்த கைவினைப் பொருள் கண்காட்சியின் 40-வது பதிப்பில், 31 மாநிலங்களில் இருந்து  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் 400 ஸ்டால்களை அமைத்துள்ளனர்.

நாட்டில் திறமைக்கு குறைவில்லை, என்று கூறிய அவர், நெருக்கடியான காலத்தில் சுயசார்பு இந்திய இயக்கத்தை உருவாக்குவதற்கான பிரதமரின் தெளிவான அழைப்புக்கு இந்தியா எவ்வாறு பதிலளித்தது என்பதை நினைவு கூர்ந்தார். நாம் முழு கவச உடைகள், முககவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை கூட தயாரிக்க தொடங்கியதை " அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.

'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு'  என்ற முறையில் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தயாரிப்புக்கு அங்கீகரிக்கப்பட்டதை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சி மக்கள் தங்கள் சொந்த வருமானத்தை உருவாக்கிக்கொள்ள  அனுமதித்ததுடன், உலகெங்கிலும்  பொருளாதார நிலை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகிலுள்ள சிலருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியது என்றார்.

திறன் இந்தியா திட்டத்தை மேம்படுத்துவதில் பிரதமர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை திரு தாக்கூர் எடுத்துரைத்தார். "திறன் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம், நீங்கள் வேலை தேடுபவர்களாக மாறாமல், வேலை கொடுப்பவர்களாக மாறுங்கள் எப்பிற்று கூறினார்." நமது கலாச்சாரம் மற்றும் கல்வி அமைப்பு உழைப்பின் பெருமையில் அதிக கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர் , “தொழிலாளர் கண்ணியம் குறித்து பிரதமர் திரு மோடி பலமுறை  வலியுறுத்தியுள்ளதாக, கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817557

****



(Release ID: 1817590) Visitor Counter : 208