பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது : பிரதமர்

प्रविष्टि तिथि: 16 APR 2022 9:00AM by PIB Chennai

அமைப்புசாரா தொழிலாளர் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாட்டின் வளர்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் திரு.மோடி குறிப்பிட்டுள்ளார்.  

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;   

“நாட்டின் வளர்ச்சியில், நமது அமைப்புசாரா தொழிலாளர் சகோதர-சகோதரிகளின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது.  இதுபோன்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்க, எங்களது அரசு, எப்போதும் பாடுபட்டு வருகிறது.   இந்தத் திட்டங்கள், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின்போது அவர்களுக்கு உதவ, மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன“ என்று தெரிவித்துள்ளார்.   

*****


(रिलीज़ आईडी: 1817260) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam