சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் - நிக்கோபர் தீவு இணைப்புத் திட்டம்.

प्रविष्टि तिथि: 13 APR 2022 12:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வையில் கடைசி மைல்கல்லை அடையும் வகையில், தீவுகளில் தடையற்ற போக்குவரத்து வசதிகளை  வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து வானிலைக்கும் ஏற்ற பாதுகாப்பான சாலைகளை அமைக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தேசிய நெடுஞசாலை-4-ன் உள்ள பியோட்னாபாத் முதல் ஃபெரார்கஞ்ச் வரையிலான பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் கடந்த  2019-ம் ஆண்டு  நிறைவடைந்ததாக திரு கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில்,  இந்த 26 கிமீ நீளமுள்ள சாலை அந்தமான் - நிக்கோபார் தீவு இணைப்பு திட்டத்தின் கீழ் 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பயன்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், போர்ட் பிளேயரில் இருந்து அந்தமான் மாவட்டத்தின் பிற நகரங்களுக்கு தடையற்ற போக்குவரத்து  உறுதி செய்யப்பட்டுள்தாக அமைச்சர் கூறினார். தேசிய நெடுஞசாலை-4  எனப்படும் 'அந்தமான் ட்ரங்க் சாலை' தீவுகளின் உயிர்நாடி என்றும், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816263

***************


(रिलीज़ आईडी: 1816405) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu