பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் அடலாஜ்-ல் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் விடுதி மற்றும் கல்வி வளாகத்தை பிரதமர் 12 ஏப்ரல் அன்று தொடங்கி வைக்கிறார்


ஜன்சகாயக் அறக்கட்டளையின் ஹிராமானி ஆரோக்கியதாமுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 11 APR 2022 6:13PM by PIB Chennai

குஜராத்தின் அடலாஜ்-ல் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் விடுதி மற்றும் கல்வி வளாகத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, 12 ஏப்ரல் அன்று காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ஜன்சகாயக் அறக்கட்டளையின் ஹிராமானி ஆரோக்கியதாமுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

விடுதி மற்றும் கல்வி வளாகம் 600 மாணவர்கள் தங்கும் வகையில் 150 அறைகளை கொண்டதாக இருக்கும். குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதுவதற்கான பயிற்சி மையம், மின்னணு நூலகம், மாநாட்டு அரங்கம், விளையாட்டு அறை, தொலைக்காட்சி அறை மற்றும் மாணவர்களுக்கான ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்டவையும் இந்த வளாகத்தில் இடம் பெற உள்ளன.

ஜன்சகாயக் அறக்கட்டளை ஹிராமானி ஆரோக்கியதாமை உருவாக்க உள்ளது. ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கக் கூடிய வகையிலான அதிக நவீன மருத்துவ வசதிகள், 24 மணி நேரமும் செயல்படும் ரத்த வங்கி, மருந்து விற்பனையகம், நவீன பரிசோதனைக் கூடம் மற்றும் உயர்தர உடல் பரிசோதனை சாதனங்களும் இங்கு இடம் பெற்றிருக்கும். ஆயுர்வேதா, ஹோமியோபதி, அக்குபஞ்சர், யோகா சிகிச்சைகளுக்கான அதிநவீன வசதிகள் கொண்ட காப்பகமும் இங்கு இடம்பெறும். மேலும் முதல் உதவி பயிற்சி, தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி மற்றும் மருத்துவர் பயிற்சி வசதிகளும் இந்த வளாகத்தில் இடம் பெறும்.

 

****



(Release ID: 1815736) Visitor Counter : 131