நித்தி ஆயோக்
மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று -1 வெளியீடு
Posted On:
11 APR 2022 1:46PM by PIB Chennai
நித்தி ஆயோக் மூலம் 2022 ஏப்ரல் 11 அன்று மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தலைமை தாங்கினார். நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய மின்சார அமைச்சக செயலாளரும், நித்தி ஆயோக்கின் கூடுதல் செயலாளருமான (எரிசக்தி) திரு அலோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் விவரித்தார். மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1-ல் மாநிலங்களின் செயல்பாடு ஆறு அளவுகோல்களை கொண்டு தரவரிசை செய்யப்பட்டுள்ளது. 1. டிஸ்காம் செயல்பாடு 2. எரிசக்தி எளிதில், குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைத்தது 3. தூய்மை எரிசக்திக்கான நடவடிக்கைகள் 4. எரிசக்திக்கென 5. சுற்றுச்சூழல் நீடித்திருத்தல் 6. புதிய முன்முயற்சிகள். இந்த அளவுகோல்கள் மேலும் 27 குறியீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 1. முன்னோடிகள் 2. சாதனையாளர்கள 3. முன்னேற விரும்புகின்றவை.
மாநிலங்களின் அளவு மற்றும் புவியியல் வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகியவை தரவரிசையில் முதல் 3 பெரிய மாநிலங்களாக உள்ளன. தமிழ்நாடு தரவரிசையில் 43.4 சராசரி புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை பெற்றுள்ளது. நன்றாக செயல்பட்ட சிறிய மாநிலங்களின் தரவரிசையில் கோவா முதலிடத்தையும், திரிபுரா, மணிப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை சண்டிகர், தில்லி, டாமன் அண்ட் டியூ / யாத்ரா, நாகர்ஹவேலி ஆகியவை சிறந்த செயல்பாடு உள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன. புதுச்சேரி 48.5 சராசரி புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815612
***************
(Release ID: 1815645)
Visitor Counter : 766