சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் ஏப்ரல் 10 முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்

Posted On: 08 APR 2022 3:01PM by PIB Chennai

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் ஏப்ரல் 10 முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டு ஒன்பது மாதங்கள்  பூர்த்தி அடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை  டோசுக்கு தகுதியானவர்கள் ஆவர்.

இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டோரின்  96 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதே வயது பிரிவில் 83 பேர் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்ட 2.4 கோடி பேர் முன்னெச்சரிக்கை டோஸ்களை செலுத்திக் கொண்டனர். 12 முதல் 14 வயதுக்கு  உட்பட்ட வயது பிரிவினரில் 45 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி  செலுத்திக் கொண்டுள்ளனர்.  தற்போது அமலில் உள்ள கட்டணமில்லா தடுப்பூசி திட்டம் அரசு தடுப்பூசி மையங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814804

-----


(Release ID: 1814912) Visitor Counter : 405